இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி  ஆகியவற்றிற்கு ஏற்ற காரசாரமான  கார சட்னி !!!

இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி  ஆகியவற்றிற்கு ஏற்ற காரசாரமான  கார சட்னி செய்யலாம் வாங்க .

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 5

தக்காளி – 1

பூண்டு – 3

எண்ணெய் –  தேவைக்கேற்ப

கடுகு – 1/4 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு – 1/4 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

 

கறிவேப்பிலை – தேவையான அளவு

காரச் சட்னி க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் சின்ன வெங்காயம் , தக்காளி, பூண்டு , மிளகாய்த்தூள், தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து பச்சையாக அரைத்துக் கொள்ள  வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை  மற்றும்  அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கினால்  சுவையான கார சட்னி தயார்!!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *