‘என் வாழ்க்கையில் கடினமான கேரக்டர் இதுதான்’ பிரபல நடிகை கருத்து …!!!

 2020-ம் ஆண்டு வெளிவரவுள்ள ‘The Girl On The Train’ படத்தின் கேரக்டர் தன் வாழ்க்கையில் மிக கடினமான கேரக்டர் என்று ப்ரணிதி சோப்ரா கூறியுள்ளார்.

ஹிந்தி சினிமாவில் அனைவரும் அறிந்த இளம் நடிகைகளும் ஒருவர்தான் ப்ரணிதி சோப்ரா. டாப் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் தன கருத்தை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரின் நடிப்பில் வந்த கோல்மான் எகெய்ன், மேரே பியாரி பிந்து படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரின் நடிப்பில் வரும் 2020-ம் ஆண்டு வெளிவரவுள்ள படம் ‘The Girl On The Train’.

2016-ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் பாத் ரூம் பாத் டப்பில் நெற்றியில் காயத்துடன் அதிர்ச்சியாக பார்க்கும் அவரின் இந்த லுக் பலரையும் கவர்ந்துள்ளது. இது குறித்து அவர் ‘இது போல நான் இதுவரை செய்தது இல்லை,என் வாழ்க்கையில் மிக கடினமான கேரக்டர் இதுதான்’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *