இந்த காலத்துல இப்படியா ?… கோடி சொத்து வேணா ….. விவசாயியுடன் திருமணம்…. என்ஜீனியரிங் பெண்ணுக்கு குவியும் பாராட்டு….!!

திருவண்ணாமலையில் விவசாயியை திருமணம் செய்துகொண்ட பெண்ணிற்கும் அவரது தந்தைக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த  வண்ணம் உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் பகுதியை அடுத்த முனியன்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். இவரது மகள் அரசம்மாவை இன்ஜினியரிங் படிப்பு படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் படித்து முடித்து 27  வயது ஆகும் நிலையில் அவரை வெளிநாடு மாப்பிள்ளைகளும், ஐடி கம்பெனியில் பணிபுரியும் மாப்பிள்ளைகளும் தொடர்ந்து பெண் கேட்டு வந்தனர்.

ஆனால் அவர்கள் யாருக்கும் சம்மதம் தெரிவிக்காத அரசம்மா, அதே பகுதியை சேர்ந்த அவரது அத்தை மகனான விவசாயி சிவகுமார் பெண் கேட்டு வந்ததும் திருமணம் செய்ய சம்மதித்தார். இதையடுத்து தனது தந்தையிடம் எனக்கு தாய்வீட்டு சீதனமாக டிராக்டர் வாங்கித் தரவேண்டும் என்றும் கேட்டார். இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி அன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்,

நேற்றைய தினம் அவரது தந்தை தாய் வீட்டு சீதனமாக டிராக்டரை வாங்கி கொடுத்து அதற்கு பூஜை செய்து வயலில் உழுதனர். இதுகுறித்து அரசம்மாவிடம் கேட்கையில், என்னை பலர் வசதிபடைத்தவர்கள் பெண் கேட்டு வந்தாலும் எனக்கு விவசாயத்தில் தான் ஆர்வம். எனது அத்தை மகன் சிவக்குமார் ஒரு விவசாயி. அதனால்தான் அவரை திருமணம் செய்ய நான் ஒப்புக்கொண்டேன்.

விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு அதனை பாதுகாக்க என்னைப்போன்ற படித்த பட்டதாரிகள் முன்வரவேண்டும். தற்போது நான் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அரசு வேலை கிடைத்தாலும் கணவருக்கு உறுதுணையாக விவசாயப் பணியில் எப்போதும் பணி புரிவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது சிந்தனைக்கும் பலரது வீட்டில் பெண்ணை வசதியான இடத்தில் தான் கட்டி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி மகளின் ஆசைப்படி விவசாயிக்கு கட்டிவைத்த அவரது தந்தைக்கும் பாராட்டுக்கள் சமூகவலைத்தளத்தில் குவிந்து வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *