சம்பளத்தில் கை வைக்காதீர்….. இதுவே நம் தாரக மந்திரம்…. நாட்டு மக்களிடம் மோடி பேச்சு …!!

இந்தியாவையும் மிரட்டும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம்  பேசினார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து  என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து கட்டுபிடிக்காத நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் பேசினார். அதில் முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.வீட்டில் இருந்தே பணி செய்யும் முறைக்கு மாற வேண்டும். இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது. தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.

மார்ச் 22 ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு என்பதை தாண்டி மேலும் ஒரு விஷயத்தையும் கேட்கிறேன். தங்களை பற்றி கவலை கொள்ளாமல் மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், உணவு விநியோகம் செய்வோர். அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்போர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு அனைவரும் கைதட்டியும், கரகோஷம் எழுப்பியும் நமக்காக பணியாற்றுவோரை உற்சாகப்படுத்த வேண்டும். உங்களுக்கு ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், அவசரமில்லை என்றால் தள்ளிப்போடுங்கள்.

தற்போது வேலைக்கு வரமுடியாமல் போகும் தொழிலாளர்களின் சம்பளத்தில் கை வைக்காதீர். பொதுமக்கள் பதற்றம் அடைந்து பொருட்கள் வாங்கி பதுக்க வேண்டாம். எப்போதும் போல் உங்கள் தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்குங்கள்.

மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது.நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும் – இதுவே நம் தாரக மந்திரம் என்று பல்வேறு விஷயங்களை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.