தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக முதல்வரை பிரதமர் பாராட்டினார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் , மருத்துவப் பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை , முன்னெச்சரிக்கை குறித்து முதல்வரிடம் பிரதமர் கேட்டறிந்தார். தமிழக அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். நாளை நடைபெறும் மக்கள் ஊரடங்குக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமரிடம் முதலமைச்சர் உறுதி அளித்தார்.

அரசு மருத்துமனையில் தனிமைப்படுத்தப்படும் வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமூக பரவில்லை, மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். விடுமுறை கால மனநிலையிலிருந்து மக்கள் வெளியே வந்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் மேலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.