இது தூக்குதுரை ….. என்னிடம் கேட்கவில்லை….. கதறும் டி.இமான் ….!!

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையை மர்ஜவான் இந்தி படத்தில் பயன்படுத்தியது பற்றி  டி.இமான் ட்வீட் செய்துள்ளார்.

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தில் தூக்குத்துரை அஜித்துக்கு இசையமைப்பாளர்  டி.இமான் போட்ட தீம் மியூசிக்  அஜித் ரசிகர்களால் இன்னும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த தீம் மிகவும் பிரபலமாகியது. இந்நிலையில் பாலிவுட் படமான `மர்ஜாவான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியது.

ரிதேஷ் தேஷ்முக், வருண் தவான், தாரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின்  ட்ரெய்லருக்கு  இசையமைத்தது இமான் என யூ-ட்யூபில் பதிவு செய்யப்பட்டு அதில் விஸ்வாசம் படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்ட்டுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த டி.இமான் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், தான் இசையமைத்த தீம் மர்ஜவான் இந்தி படத்தின் ட்ரெய்லரில் பயன்பட்டுள்ளது.இதுகுறித்து அந்தப் பட தயாரிப்பு நிறுவனமோ, ஆடியோ நிறுவனமோ என்னிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை” என்று  ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *