இது வேற லெவல்….. நடிகர் விஜயுடன் தளபதி 67 படத்தில் இணைந்த அர்ஜுன்…. தாறுமாறு அப்டேட்டால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சூட்டிங் அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் 50 வயது தாதாவாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், நடிகர் திரிஷா கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், மற்றொரு கதாநாயகிக்கு சமந்தாவிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து படத்தில் தளபதிக்கு வில்லனாக 6 பேர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், பலரின் பெயர்கள் அடிபட்டது. இதில் தற்போது நடிகர் அர்ஜுன் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் அர்ஜுனுக்கு கதை பிடித்து விட்டதால் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply