இது வேற லெவல்… இன்ஸ்டாவில் 250 மில்லியன் பாலோவர்ஸ்…. ஆசியாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த விராட் கோலி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் திறமையான வீரர் விராட் கோலி. ரசிகர்களால் அன்போடு கிங் கோலி என அழைக்கப்படும் விராட் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுகிறார். இதனால் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் 250 மில்லியன் பேர் தற்போது இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பின் தொடர்கிறார்கள். இதனால் ஆசியாவில் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்சை கொண்ட முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். மேலும் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக அதிக பாலோயர்சை கொண்ட விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

Leave a Reply