“இது இன்னொரு கிளைமேக்ஸ்”…. வாத்தி படத்தின் நீக்கப்பட்ட காட்சி.‌.. வைரலாகும் வேற லெவல் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி  இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் பாலமுருகன் என்னும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசான நிலையில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. தெலுங்கில் மட்டும் வாத்தி படம் 20 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்ததாக கூறப்படுகிறது. வாத்தி திரைப்படம் வருகின்ற மார்ச் 17-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.இந்நிலையில் வாத்தி திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இது வாத்தி திரைப்படத்தின் இன்னொரு கிளைமாக்ஸ் ஆக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

Leave a Reply