இப்படி பண்ணாதீங்க…! இது  ”கொள்ளையடிக்கும் செயல்”… ஹெச்.ராஜா ஆவேசம் …!

அறநிலையத்துறையின் கீழ் தொடங்கப்படும் கல்லூரியில் மாற்று மத ஆசிரியர்களை போடுவீர்களா ? என ஹெச்.ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர், மானிய கோரிக்கையின் போது அறிவித்த எல்லா அறிவிப்பும் அவருடைய அதிகாரத்துக்கு மீறியது. காரணம் இப்போ என்ன சொல்கிறார்கள்…  நாங்கள் இத்தனை கல்லூரி ஆரம்பிக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள். இரண்டு நாட்கள் கழித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நான் கல்லூரி ஆரம்பிக்கப் போறேன் என்று சொல்கிறார்.

எந்த பணத்தில்…. அறநிலையத்துறை பணத்தில்…. பல ஜட்ஜ்மெண்ட் இருக்கு…. எண்டோமென்ட் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதை தவிர வேறு பணிகளில் அந்த பணத்தை செலவு பண்ண கூடாது. நம்முடைய முன்னோர்கள் எந்த நோக்கத்திற்காக ஒரு எண்டோமென்ட் உருவாக்கி இருக்கிறார்களோ அதை தான் செய்ய வேண்டும். ஆனால் 12.2.2018 மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்றத்தில் அதனுடைய தீர்ப்பில் நீதிபதி மகாதேவன் சொல்கிறார், உபரி நிதி இருக்குமானால் கல்வி நிலையங்கள் துவங்கலாம்.

ஆனால் அதில் மதப்பாடம் கட்டாயமாக இருக்க வேண்டும். ஆனால் பழனியில் முருகப்பெருமானுக்கு இந்துக்கள் போடுகின்ற காணிக்கையில் இருந்து கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அதில் இத்தனை சதவீதம் பிற மத ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எப்படி போடுவீர்கள் ? கிரிஸ்டியன் மிஷனரி கல்லூரி ஆரம்பித்தால் அதில் இத்தனை சதவிகிதம் இந்துகளுக்கு என சட்டம் கொண்டு வர முடியுமா ? இது இந்துக்களை கொள்ளையடிக்கும் செயல்.

ஏனென்றால் பிற மத ஆசிரியர்களை போட்டு இந்துக்களை மதம் மாற்றுவதற்காகவா ? என்ன அராஜகம் நடக்கிறது. அதே மாதிரி கன்னியாகுமரி குழித்துறையில்…. பகவதி அம்மன் கோவிலால் நடக்கின்ற கல்லூரியில் மாற்று மத ஆசிரியர்களை போடுவீர்களா ? இது என்ன அராஜகம் என ஹெச். ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *