என்ன கருமம்டா இது..! காதலுக்காக ஆணாக மாறிய இளம்பெண்.. வேறொரு ஆணுடன் ஓடிய காதலி..!!!

காதலுக்காக பாலினத்தை மாற்றிய இளம் பெண்ணை தவிக்க விட்டு அவரின் காதலி வேறொரு ஆணுடன் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனால். சோனால் வீட்டிற்கு சனா என்பவர் வாடகைக்கு வந்துள்ளார். நாளடைவில் சோனாலுக்கும் சனாவுக்கும் நட்பு ஏற்பட்டு நல்ல தோழிகளாக மாறியுள்ளனர். இந்நிலையில் சனா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சனாவுடன் தான் வாழ்வேன் என்று கூறிவிட்டு சோனாலும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

காதலின் காரணமாக சனா பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அறுவை சிகிச்சை செய்து தனது பெயரை அதிகாரப்பூர்வமாக ஹோகைல் கான் என மாற்றிக் கொண்டார். மருத்துவமனையில் இருந்தபோது அங்கு பணிபுரிந்த கியான் என்பவருடன் சோனாலுக்கு தொடர்பு ஏற்பட்டது. ஒரு நாள் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு கியானுடன் வாழ விரும்புவதாக சனாவிடம் சோனால் கூறியுள்ளார். இந்நிலையில் சோனால் பிரிந்து சென்ற பிறகு அவரது குடும்பத்தினர் சனா மீது வழக்கு தொடர்ந்த நிலையில் சனாவும் இதில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர்களின் வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

Leave a Reply