எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் மீண்டும் வெளியாகும் திருமணம் திரைப்படம் ….

எதிர்பார்த்த வெற்றியை தராததால் மீண்டும் திருமணம் திரைப்படத்தை வெளியிட திரைப்படக்குழு திட்டமிட்டுள்ளது .

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்களைத் தந்த இயக்குனர்களில் ஒருவர் சேரன் அவர்கள் சிறந்த இயக்குனரும் நடிகருமான இவர் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு படத்திலும் ஈடுபடாமல் இருந்தார் இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைக் களத்துடன் திருமணம் சில திருத்தங்களுடன் எனும் திரைப்படத்தை இயக்கி கடந்த மார்ச் 3ம் தேதி அந்த திரைப்படமானது வெளியானது

விமர்சன ரீதியாக தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை திருமணம் திரைப்படமானது பெற்றது ஆனால்  விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் தோல்வி அடைந்ததாகவும்  அதிக அளவில் திரையரங்கு மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்பட வில்லை என்ற கருத்துக்களும் வெளியாகின இதனால் திரைப்படக்குழுவினர் சற்று மன உளைச்சலுக்கு ஆளானார்கள் 

ஆனால் இந்த திரைப்படமானது  தேர்வு நேரங்களில் வெளியிட்ட காரணத்தினால் குடும்பங்களுடன் சென்று பார்க்க முடியாத சூழ்நிலை என்பது ஏற்பட்டதால் இந்த திரைப்படம் அதிக அளவு வெற்றி அடையவில்லை என்றும் இந்த திரைப்படம் குடும்பங்களோடு சென்று பார்க்க வேண்டிய   படம் என்பதால் தற்பொழுது  தேர்வுகள் முடிந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு திரைப்படக் குழு முடிவு செய்திருக்கிறது

குடும்பங்களின் மத்தியில் திருமணம் சில திருத்தங்களுடன் படத்தில் இருக்கக் கூடிய அரிய கருத்துக்களை விதைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கருத்துக்களை மக்களிடையே அதிகம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காகவும்  வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி இந்த திரைப்படத்தை மீண்டும் திரைப்படக்குழு வெளியிட இருக்கிறது இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் எங்களது நோக்கம் நிறைவேற உங்களது ஆதரவு  வேண்டும் என்றும்  திரைப்படக்குழு தமிழக மக்களிடையே வேண்டுகோள் விடுத்துள்ளது.