“திருமண வரவேற்பு நிகழ்வு”… பெண்ணின் நெகிழ்ச்சியான செயல்…. வைரலாகும் போட்டோ….!!!

சகோதரன் வரவேற்பு நிகழ்வில் எஞ்சிய உணவுகளை பெண் ஏழைகளுக்கு வழங்கி தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் மணமகனின் சகோதரி பாபியா கர் என்பவர் விருந்தினர் சாப்பிட்ட உணவுபோக எஞ்சிய உணவுகளை நள்ளிரவு 1 மணியளவில் அம்மாநிலத்தில் உள்ள ரணகாட் ரயில் நிலையத்திற்கு அருகே தங்கியிருப்பவர்களுக்கு தனது கையாலே திருமண விருந்து கொடுத்துள்ளார். இதனை பார்த்த நிலஞ்சன் மொண்டல் என்ற திருமண நிகழ்வுகளை படம் பிடிக்கும் புகைப்படக் கலைஞர் பாபியாவின் செயல்களை தனது கேமராவில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு சகோதரி பாபியாவின் செயல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *