சோறு திருடி தின்ற கொள்ளையர்கள் … காவல்துறையினர் வலைவீச்சு ..!!

வேலூர் மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் .

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இலக்கியநாயக்கன்பட்டியின்  கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார். நேற்று இவரது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் கொள்ளையர்கள் கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர் . அப்போது ,  கதவை உடைக்க முடியாத காரணத்தால் கொள்ளையர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். அதன்பின் ,  இந்த காட்சிகள் அருகே அருகே இருந்த  சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியது.

Image result for bike robbery

மேலும் , கொள்ளையர்கள்  இதற்கு முன்பு  முரளி என்பவரின்  வீட்டின் கதவை  வெளிப்புறமாக பூட்டிவிட்டு அவரின் இரு சக்கர வாகனத்தை திருடியும் ,   வீட்டின் வெளியே அமைக்கப்பட்டிருந்த சமையலறையில் இருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு விட்டும்  சென்றுள்ளனர். பின்னர் , காவல்நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது . எனவே ,  காவல்துறையினர்  சிசிடிவி காட்சிகளைக்  கொண்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.