“எங்களை விட்டுவிடுங்கள்!”.. கெஞ்சிய கணவர் கண்முன்னே மனைவியை கொன்ற திருடர்கள்..!!

கிரீஸ் நாட்டில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையர்கள் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிரீஸ் நாட்டில்  வசிக்கும் தம்பதி Charalambos Anagnostopoulos(33) மற்றும் Caroline Crouch(20), தங்கள் 11 மாத பெண் குழந்தையுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, திடீரென்று மர்ம கும்பல் முகமூடி அணிந்து கொண்டு வீட்டிற்குள் துப்பாக்கிகளோடு புகுந்துள்ளார்கள். அதன்பிறகு Charalambos ஐ கட்டிப்போட்டு விட்டு, Carolineனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்கள்.

உடனடியாக Charalambos, பணம் இருக்கும் இடத்தை காட்டியுள்ளார். அந்த பணத்தை எடுத்த பின்பும் அவர்கள் மேலும் பணம் கேட்டு குழந்தையின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கிறார்கள். இதில் பயந்த Charalambos, மனைவியையும், குழந்தையையும் விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். மேலும் கரோலின் கூச்சலிட்டுள்ளார்.

அதன்பிறகு கரோலினிடமிருந்து எந்தவித சத்தமும் இல்லை. அதாவது கரோலின் கூச்சலிட்டதால் அவரின் கழுத்தை துணியால் அவர்கள் நெரித்ததில் அவர் உயிரிழந்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து திருடர்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். அதன்பின்பு Charalambos போனை தேடி பிடித்து, தன் மூக்கால் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து Charalambos மற்றும் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து திருடர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *