“சந்தோசஷத்தில நெஞ்சுவலியே வந்துட்டு” திருடனுக்கு அடித்த அதிர்ஷ்டம்… அரங்கேறிய சுவாரஸ்யமான சம்பவம்…!!

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமான பணம் கிடைத்ததால் சந்தோஷத்தில் நெஞ்சு வலி ஏற்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோட்வாலி திஹட் பகுதியில் நவாப் ஹைடர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு பொது இ-சேவை மையத்தில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி 2 கொள்ளையர்கள் 7 லட்ச ரூபாயை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து நவாப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 7 லட்ச ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அழிப்பூர் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நவ்ஷத் மற்றும் எஜஸ் என்ற இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தான் பொது சேவை மையத்தில் திருடி சென்றவர்கள் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அந்த இரண்டு கொள்ளையர்களும் தாங்கள் எதிர்பார்த்த பணத்தை விட அதிகமான பணம்  கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு தன் வாழ்க்கையில் தான் எதிர்பாராத இவ்வளவு அதிகமான பணம் கிடைத்த சந்தோஷத்தில் ஒரு கொள்ளையனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதன் பின் தான் கொள்ளையடித்த பணத்தை தனது மருத்துவச் செலவிற்காக அவர் செலவிட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.