வீடு புகுந்து மீனை ருசித்து சாப்பிட்ட திருடர்கள் ….!!

விழுப்புரம் மரக்காணம் அங்கே திருவடியில் அரசுப் பொறியாளர் செந்தில்குமார் வீட்டுக்குள் புகுந்த அவர்கள் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவமானது என்பது தினமும் வாடிக்கையான நிகழ்வாக அரங்கேறி வருகின்றது.இதில் பல்வேறு பகுதிகளில் திருடச் செல்லும் திருடர்கள் பல்வேறு குசும்புத்தனத்தை செய்து வருவதும் வாடிக்கையாக இருந்து வருகின்றது.கொள்ளை அடித்த கடை சுவற்றில் நாமம் போட்டுவைத்து , பணம் இல்லை என்று அறிந்த கொள்ளையர்கள் கடிதம் எழுதி வைத்துச் சென்றது , வீடுகளுக்கு சென்று திருடும் போது அங்கிருந்த ஊஞ்சலில் ஆடி செல்வது என்று அண்மையில் அரங்கேறிய திருடர்களின் சேட்டைகள் ஆகும்.

Related image

அந்த வகையில் இன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி திருவடியில் அரசுப் பொறியாளர் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த மீன் , பால் சாப்பிட்டு விட்டு சென்றனர். மீன் குழம்பு பாத்திரத்தை வெளியே தூக்கி சென்று சாப்பிட்டுவிட்டு இரண்டு திருடர்களும் சென்றனர். அரசுப் பொறியாளர் செந்தில்குமார் வீட்டுக்குள் புகுந்த அவர்கள் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடி உள்ளனர்.திருடர்கள் செய்த சேட்டைகளில் இந்த சம்பவமும் சேர்ந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *