கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர் நகரில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயகௌரி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். என்பதில் வேலைக்கு சென்று விட்டு ஜெயகௌரி வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஜெயகௌரியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயகௌரி திருடன் திருடன் என சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது. அவர் கார் டிரைவராக இருக்கிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply