திடீர் திருமணம்…. பெற்றோர் கூட வரல ஏன்?…. நடிகை பிரியங்கா பதில்….!!!!

சன் டிவியில் சென்ற 2018-ஆம் வருடம் தொடங்கப்பட்ட ரோஜா சீரியல் கிட்டத்தட்ட 4 வருடங்கள் வெற்றிகரமாக ஓடி அண்மையில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலை முடித்த கையோடு சிபு சூரியன் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா-2 தொடரில் நாயகனாக கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் பிரியங்கா ஜீ தமிழில் சீதா ராமன் எனும் தொடரில் நடித்து வருகிறார்.

பிரியங்கா கடந்த 2018-ஆம் வருடம் தான் காதலித்து வந்த தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலை நிச்சயதார்த்தம் செய்தார். அதன்பின் இவர்களது திருமணம் தள்ளிபோனது. இந்நிலையில் திடீரென்று பிரியங்கா ராகுலை மலேசியாவிலுள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து  பேட்டி ஒன்றில் பிரியங்கா கூறியதாவது, விசா உள்ளிட்ட பிரச்சனையின் காரணமாக தான் என் திருமணத்துக்கு பெற்றோர்களால் வர முடியவில்லை. எனினும் அவர்கள் என் திருமணத்தால் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் என கூறியுள்ளார்.