இபிஎஸ் நேற்று(ஜன,.15) தனது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தார். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொங்கல் விழா கொண்டாட தயாராக இருந்தது.
இந்நிலையில் அவருக்கு மிக நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரென்று இறந்ததால் பொங்கல் விழாவை கொண்டாடாமல், துக்க வீட்டிற்கு பைக்கில் கிளம்பி சென்றார் இபிஎஸ். அதன்பின் இபிஎஸ் இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சாமான்யர்களின் தலைவர் ,
ஏழைகளின் வலி – உழைப்பு அனைத்தும் அறிந்தவர்….
எளிமையே உருவான எங்கள் அண்ணன் , கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவரின் கிராம பொங்கல் விழாவினிடையே…. #பொங்கல்_வாழ்த்துக்கள் pic.twitter.com/uUzUYAHvXa— Raj Satyen – Say No To Drugs & Dmk (@satyenaiadmk) January 15, 2023