திடீரென வெடித்த தார் பாய்லர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள பஞ்சு காளிப்பட்டி அண்ணாநகர் பகுதியில் கூலித்தொழிலாளி பூபதி வசித்து வந்தார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். வாழப்பாடி அருகில் உள்ள முத்தம்பட்டி மைக்ரோ ஸ்டேஷன் பேருந்து நிறுத்தம் அருகில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் பிளாட் அமைத்துள்ளனர். அங்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தார் சாலை போடும் பணியில் பூபதி மற்றும் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென தாரை உருக்கும் பாய்லர் வெடித்ததால் பூபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூபதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாதுகாப்பாக வேலை செய்யாமல் கவனக்குறைவாக கூலி தொழிலாளியின் இறப்புக்கு காரணமாக இருந்த சேலம் சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் சுப்பிரமணியன், போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த மேற்பார்வையாளர் சதீஷ், மற்றும் நில உரிமையாளர் சஞ்சய் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *