திடீரென கூச்சலிட்டார்…. மத வெறுப்புக்கு ஆளான பெண்…. கேமராவில் பதிவான காட்சி….!!

பிரித்தானியாவில் பெண் ஒருவர் இஸ்லாமிய வெறுப்பு துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Nottinghamshire-ல் கடந்த 19-ஆம் தேதி இஸ்லாமிய பெண் ஒருவர் மற்றொரு பெண்ணால் வெறுக்கப்பட்டு பேசும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது. இதுகுறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டு இருக்கும் செய்தியில் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 11 மணியளவில் Nottinghamshire-ல் உள்ள Mansfield பகுதியில் 2 இஸ்லாமிய பெண்கள் 3 வயது சிறுவனுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை குறுக்கிட்ட ஒரு பெண் திடீரென கூச்சலிட்டு கத்தினார். இதனையடுத்து அங்கு இருக்கும் ஒரு நபரால் குறித்த பெண் தடுக்கப்பட்டார்.

அதன்பின் காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மெட்ரோ கோ யூகேவிற்கு Mansfield-ஐ சேர்ந்த Dina Singh என்பவர் பிரத்யேகமாக இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். அதாவது “நானும் என் தோழியும் அன்றைய தினம் ஷாப்பிங் செய்வதற்காக அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது யார் என்று தெரியாத ஒரு பெண்ணால் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக குறிவைக்கப்பட்டு வெறுப்பு துஷ்பிரயோகத்திற்கு உள்ளானேன். இதற்கு முன்பாக நான் தனியாக நடந்து வந்தபோது அந்த பெண் பேச தொடங்கினார். இந்நிலையில் நான் அப்போது அவரிடம் விலகிச் செல்லுங்கள் என்று கூறினேன். உடனே அவர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். இதனால் நான் சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு நடந்து சென்றேன்.

அப்போது அங்கு என் தோழியை சந்தித்தேன். அவருடன் சிறுவன் இருந்தார். இதனைதொடர்ந்து நாங்கள் 3 பேரும் திரும்பி சென்றோம். அப்போது அந்த பெண் மீண்டும் கூச்சலிட ஆரம்பித்தார். இதனால் நான் உடனே உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டேன். அதற்கு அவர் என் சகோதரன் போரில் இறந்தது உங்களால் தான், உன் மதத்தை கேள் என்று கூறிவிட்டு எங்களை பயங்கரவாதிகள் என்று கத்த ஆரம்பித்தார். இது மிகவும் வெறுப்பாக இருந்தது. அதே சமயத்தில் அங்கே இருந்த இளைஞர் ஒருவர் எங்களுக்கு இடையே நின்று தடுத்தார். நாங்களும்  பிரித்தானியர்களாக பிறந்து வளர்ந்தவர்கள்.

எனவே நாங்கள் வெளிநாட்டவர்கள் என்பதால் இது எங்களுக்கு எதிரானது என்று நீங்கள் கூற முடியாது. நாங்கள் ஆடை அணிந்த விதம் மற்றும் இஸ்லாமியர்கள் என்ற உண்மையின் காரணமாகத்தான் இப்படி பேசினார் என்று நினைக்கும் போது ஏமாற்றமாக இருக்கிறது. இதற்கு முன்பு இதுபோன்று நடந்ததில்லை. இது ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் சொந்த ஊரில் நீங்கள் விரும்பப்படாததுபோல் உணர வைக்கிறது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து Nottinghamshire காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த ஒரு சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து எங்களுக்கு ஒரு புகார் கிடைத்தது. ஆகவே இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *