சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சத்தில் உறையவைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. இதுவரையில் சீனாவில் 3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பலியானோரின் 4962 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தற்போது சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.
இந்நிலையில் சீனாவுக்குள் அமெரிக்க ராணுவம்தான் கொரோனா வைரஸைப் பரப்பியிருக்கலாம் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸோ லிஜியான் புதிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
இதற்கு, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மறுத்துள்ளார் எவ்வித ஆதாரமும் இல்லாமல், இதுபோன்றதொரு கடுமையான குற்றச்சாட்டைகூறுவது சரியல்ல என்றும் இந்த வைரஸ் வூஹான் நகரில் இருந்துதான் பரவியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.