மழை வேண்டி “தேவாரம் பாடி அரசர்கர்கள் யாகம்” அதிமுகவினர் பங்கேற்பு….!!

சென்னை புரசைவாக்கம் கோவிலில் மழை வேண்டி , தேவாரம் பாடி யாகம் நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.  தண்ணீருக்காக மக்கள் வீதிகளில் அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மழை வேண்டி மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் யாகம் நடத்த வேண்டுமென்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

மழை வேண்டி யாகம் க்கான பட முடிவு

இந்நிலையில் முதல்வர் துணை முதல்வர் வேண்டுகோளுக்கிணங்க அதிமுக சார்பில் சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் யாகம் நடத்தப்படுகின்றது. இதில் வீணை கச்சேரியும் , மந்திரங்களுக்கும் ஓதியும் அர்ச்சகர்கள் வேண்டினார். மழை பொழிய வேண்டி  அர்ச்சகர்கள் நின்று கொண்டு தேவாரம் பாடி பிராத்தனை செய்தனர். இதில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு மாவட்டம் முழுவதும் நடைபெறும் பல்வேறு கோவில்களில் அந்தந்த பகுதி அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.