தேசிய கீதம் பாட தெரியாமல் முளித்த நபர்…. கைது செய்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

பங்களாதேஷ் நாட்டில் இருந்து திருட்டுத் தனமாக இந்தியாவுக்குள் நுழைந்த நபர் நூதன முறையில் பிடிபட்டார். கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த அன்வர் என்பவர் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்று கூறியதால் அதிகாரிகள் இந்திய தேசிய கீதம் பாட சொல்லி இருக்கின்றனர்.

அப்போது ஒரு வரி கூட பாட தெரியாததால் அன்வர் கைது செய்யப்பட்டார். அன்வர் பங்களாதேசில் உள்ள மைமென்சிங் மாவட்டத்தின் பால்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அன்வரிடம் கியூ பிரான்ச் உள்ளிட்ட காவல் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply