அதிமுகவிற்கு  ஒற்றை தலைமை பிரச்சினை இல்லை…அமைச்சர் ஜெயக்குமார் கருத்து…!!

அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் அதிமுகவின் தலைமை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக அதிமுகவிற்கு ஜெயலலிதா போல ஒற்றைத்தலைமை வேண்டும். தற்போதைய நிலையில் அதிமுகவின் அதிகாரம் யாரிடம் இருக்கின்றது என்று அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

Image result for ராஜன் செல்லப்பா

MLA  ராஜன் செல்லப்பா_வின் இந்த கருத்துக்கு சில MLA _க்களின்  ஆதரவையடுத்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டடு அதிமுக_வின் தலைமை அனைத்து தொண்டர்களுக்கும் , நிர்வாகிகளுக்கு கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசவேண்டாம் என்ற கட்டுப்பாட்டை விதித்தது. மேலும் நிர்வாகிகளை ஆலோசனை கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சியின் தலைமையகத்தில் இன்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது.

Image result for ராஜன் செல்லப்பா ஜெயக்குமார்

இந்நிலையில் இதில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆலோசனை கூட்டம் தேர்தலுக்கு பின்னால் நடக்கக்கூடிய வழக்கமான கூட்டம் தான். இதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. தற்போது நடைபெற்றது வழக்கமாக நடைபெறும்  ஆலோசனை கூட்டம் தான். அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமை தேவை என்ற கோரிக்கை இனி  எழாது. நடைபெற இருக்கும் உள்ளாட்சித்தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.