இந்தியாவில் அமைச்சர் சேகர்பாபுவை போல் எவருமில்லை…. காவிகளுக்கு நான் சவால் விடுகிறேன்….. அமைச்சர் ரகுபதி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசினார். அவர் பேசியதாவது, நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வட மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தேன். அப்போது அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி போன்றவற்றை பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன்.

ஆனால் தமிழ்நாடு அரை நூற்றாண்டு காலமாக இவ்வளவு வளர்ச்சி அடைந்ததை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இதற்கு கலைஞர் கருணாநிதி தான் காரணம். திமுக கட்சி ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் எதிரான கட்சி கிடையாது. அமைச்சர் சேகர்பாபுவை விட இறை நம்பிக்கை கொண்டவர் மற்றும் இறைவனை வழிபடுபவர் இந்தியாவில் எவருமே இருக்க முடியாது. நான் காவிகளுக்கு சவால் விடுகிறேன். அமைச்சர் சேகர்பாபுவை விட இறை நம்பிக்கையும் இறை வழிபாடும் உடையவரை உங்களால் காண்பிக்க முடியுமா என்று கூறியுள்ளார்.

Leave a Reply