பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை…. இன்றைய விலை நிலவரம்!!

இன்றைய பெட்ரோல் விலை மற்றும்  டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

Seithi Solai
இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமுமின்றி  75 ரூபாய் 79 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல் ஒரு லிட்டர் டீசல் விலை  நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமுமின்றி  70 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.