படவாய்ப்பு இல்ல…. தவித்து வந்த தமிழ் பட நடிகைக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்…. தெலுங்கு திரையுலகில் ஒப்பந்தம்…!!

பட வாய்ப்பு இல்லாது தவித்து வந்த பிரபல ஹீரோயினுக்கு தெலுங்கு திரை உலகில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான வீரா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இதை தொடர்ந்து தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்பு எதுவுமில்லை. ஆகையால் இவர் போட்டோ ஷூட் எடுத்து அதனை தனது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் இவருக்கு தெலுங்கு திரை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் மற்றொரு ஹீரோயினும் நடிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது. நகினா திரிநாதராவ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் கோடை விடுமுறையில் தொடங்க இருக்கிறது.