இங்க முடியாது…. ”அங்க தான் முடியும்” …. கமலை கலாய்த்த அமைச்சர்…!!

கமல்ஹாசன் சினிமாவில்தான் முதல்வராக முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டலடித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பென்னர் நகரில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் நடைபெற்றது. இதில் தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். அதே போல மதுரை காளவாசல் பகுதியில் மக்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக குப்பை சேகரிக்கும் 99 வாகனங்களையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Image result for செல்லூர் ராஜூ கமல்

அதன்பின் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில், கமல்ஹாசன் சினிமாவில் தான் முதல்வராக முடியும்,தேர்தல்களின் முடிவுகள் மக்கள் அவரை தலைவராகப் பார்க்கவில்லை என்பதையே காட்டுகின்றது. மக்கள்தான் ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள்  அவர்களிடம் தான் எல்லாம் இருக்கின்றது என்று அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்தார்.