அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்று வருகின்றது.  ஓபிஎஸ் தரப்பில் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் அடிப்படை உறுப்பினர்களுக்கு தான் இருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லாது என தங்கம் தரப்பு வாதத்தை வைத்திருக்கிறார்கள்.

இபிஎஸ் தரப்பில் இருந்து,  2017 ஆம் வருடத்திலேயே கட்சியின் விதிகள் மாற்றப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலமானதற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது பொதுக்குழு மூலமே நடந்திருக்கின்றன.  அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து நடக்கவில்லை. ஆகவே ஒன்றரை கோடி அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வது இப்போதைய சூழ்நிலையில் கடினம்.

எனவே தான் பொதுக்குழு மூலமாக இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு நடைபெற்றது என   இபிஎஸ் தரப்பு வாதங்களை வைத்திருக்கிறது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு இது கட்சியின் அடிப்படை விதிகளுக்கு புறமானது . ட்சியின் உறுப்பினர்கள் மட்டுமே பொதுச்செயலாளர் இடைக்கால பொதுச் செயலாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க முடியும் என்கின்ற வாதத்தை வைத்திருக்கிறார்கள். இரண்டு தரப்புகளும் தங்கள் தரப்பு வாதங்களுக்கு வலு சேர்க்கும் வகையிலே உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வருகின்றார்கள்.