கோட்பாடு இயற்பியல் அறிஞர் “ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்” பிறந்த தினம் மார்ச்-14….. இவர் குறித்த சில தகவல்கள் இதோ…!!

குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த பயன்பாட்டு கணித திறமைகள் கொண்ட ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கோட்பாடு இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மார்ச் 14ஆம் தேதி 1879 ஆம் வருடம் பிறந்தார். இவர் இதுவரை வாழ்ந்த இயற்பியலாளர்களிலேயே தலைசிறந்த ஒருவராக கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்பு கோட்பாட்டை முன்வைத்ததோடு குவாண்டம், எந்திரவியல், புள்ளியல், இயந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார்.

குவாண்டம், எந்திரவியல் சார்பு கோட்பாடு இரண்டுமே நவீன விஞ்ஞானத்தின் உடைய இரண்டு தூண்களாக கருதப்படுகிறது. கோட்பாடு இயற்பியலில் செய்த சேவைக்காகவும் இவருக்கு 1921 ஆம் வருடம் இயற்பியலுக்காண நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்போது ஐன்ஸ்டீன் என்ற சொல் அதிக புத்தி கூர்மையுள்ள ஒருவரை குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் வுட்டெம்பர்க்கில் உள்ள உல்ம் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஹேர்மன் ஐன்ஸ்டீன் தாய் பாலின் கோச்.

இவர் முதலில் கத்தோலிக்க ஆரம்ப பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய தாயின் வற்புறுத்தலின் காரணமாக வயலின்னும் கற்று வந்தார். இவர் சிறிய வயதாக இருக்கும் பொழுது தந்தை இவருக்கு சட்டைப்பையில் வைக்கக்கூடிய ஒரு திசையருவி கருவி ஒன்றை காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதை புரிந்து கொண்டார் ஐன்ஸ்டீன். மாதிரியுறுக்களையும், கருவிகளையும் பொழுதுபோக்காக செய்து வந்தார். இருப்பினும் சிறுவனாக இருந்த போது இவருக்கு மிக மெதுவாகவே கற்க முடிந்தது. இவர் தன்னுடைய 12 ஆவது வயதில் கணிதம் படிக்க ஆரம்பித்தார்.