அப்போ திமுகவில் 90% பேர்…! 15 நாள் தான் டைம்… கெடு விதித்த எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர்  ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று… அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம்.

ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் முதலில் அவருடைய, அவர் குடும்பத்தின் உடைய, கட்சியினுடைய மானத்தை காப்பாற்ற வேண்டும். ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இருக்கின்ற இந்துக்கள் ஆ. ராசாவே தண்டிக்க வேண்டிய விதத்தில், வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம். இப்போது மாநிலம் முழுவதும் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது, எஃப். ஐ .ஆர் இருக்கிறது, அரசாங்கம் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல உரிமை இருக்கிறது.

உரிய அதிகாரிகளிடம் புகார் செய்திருக்கிறோம், அப்படியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது மாறாக எப்படி இருக்கிறது என்றால் ? சில போலீஸ் ஆபீஸர் காக்கி சட்டையை கழட்டிவிட்டு, கரைவேட்டி கட்ட ஆரம்பித்து விட்டார்களோ என்று தெரியுது. ஏனென்றால் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் பிஜேபியை சேர்ந்தவர் இதே தான்… இப்போ நான் கேட்டது தான் கேட்டுள்ளார், அதற்காக புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் அவரை கைது செய்து இருக்கிறார்.

நான் அன்று இரவே கேட்டேன், உங்க காவல் நிலையத்திலேயே ஆ. ராசாவுக்கு எதிராக புகார் இருக்கிறது, மெட்ராசுக்கு சென்று அவரை கைது செய்யுங்கள் என்று. ஆனால் இந்த தேச துரோகிகள், இந்து விரோதிகள் எல்லாம் ஒன்றாக சேருகிறார்கள், இதை இந்த தீய சக்தி திருமாவளவன் ஆதரிக்கிறார். ஆகவே இந்த தீய சக்திகள் அடுத்த முறை அரசியலுக்கு களத்தில் அவர்கள் நிற்பதற்கே மக்கள் வந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.