யாரு இப்படி பண்ணிருப்பா….? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ட்ராவல்ஸ் அதிபரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளி பொருட்கள் மற்றும் 5 பவுன் தங்க நகை போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது சுரேஷிற்கு தெரியவந்துள்ளது. இது குறித்து சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிராவல்ஸ் அதிபரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *