வீட்டிற்குள் நுழைந்த 2 பேர்…. இளம்பெண்ணை கட்டிப் போட்டு செய்த செயல்…. காஞ்சியில் பரபரப்பு….!!!

பட்டப்பகலில் இளம் பெண்ணை கட்டிப்போட்டு மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கவனிபாக்கம் கிராமத்தில் செந்தில்குமார் – திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் செந்தில்குமார் வேலைக்கு சென்று விட்ட நிலையில் திவ்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு வழியாக மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டிலிருந்த திவ்யாவை கட்டிப்போட்டு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் 4 பவுன் தாலி செயின் மற்றும் காதில் இருந்த 3 கிராம் கம்மலை கழற்றி கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர்  உறவினர்கள் அங்கு வந்து கட்டிப் போட்டிருந்த திவ்யாவை அவிழ்த்து விட்டனர். இதனையடுத்து திவ்யா அருகிலுள்ள சாலவாக்கம் காவல் நிலையத்தில் இது பற்றி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *