ரத்தம் சொட்ட சொட்ட போராடிய பெண்…. 17 பவுன் நகை, பணம் கொள்ளை…. பட்டப்பகலில் பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியில் காய்கறி வியாபாரம் பார்க்கும் உதயகுமார்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தர்ஷினி(8), ஹாருணி(6) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று காலை மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர் ஒருவர் முகத்தை மூடிக்கொண்டு ரெயின் கோட் அணிந்தவாறு வீட்டில் மாடிப்படி வழியாக உள்ளே நுழைந்தார்.

இதனையடுத்து அவர் மாலதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றைப் பறிக்க முயன்றார். இதனை தடுக்க முயன்ற மாலதியை அந்த நபர் கத்தியால் வெட்டியுள்ளார். பின்னர் மாலதி ரத்தம் சொட்ட சொட்ட மர்ம நபரிடம் போராடியுள்ளார். ஆனாலும் அவர் மாலதியிடமிருந்த தங்க நகைகள், பீரோவில் இருந்த 17 பவுன் நகை, 1 1/2 லட்சம் ரூபாய் பணம் வாங்கியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு வந்த வழியாக தப்பி சென்று விட்டார்.

இதற்கிடையில் மாலதியின் அலறல் சுத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply