ரூ 5 லட்சத்தை எடுத்துட்டு போய்ட்டாங்க….!! விசாரணையில் வெளிவந்த உண்மை…. எச்சரிக்கை விடுத்த போலீஸ்….!!!

ரூபாய் 5 லட்சம் திருட்டு போனதாக பொய் புகார் கொடுத்த நபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கீழநல்லாத்தூர் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் உரிமையாளர் வந்தவுடன் இருசக்கர வாகனத்தை திருடி விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில் தனது வீட்டில் ரூபாய் 5 லட்சம் மற்றும் 1 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக ராஜேஷ் மணவாள நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

எனவே காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை வைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர். மேலும் இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு மர்ம நபர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்த காவல்துறையினர் கிறிஸ்டோபர், பார்த்திபன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கொள்ளையடிப்பதற்காக வீட்டிற்கு சென்றது உண்மைதான், ஆனால் உரிமையாளர் வந்துவிட்டதால் பணத்தையும், நகையையும் அங்கேயே விட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தை மட்டும் எடுத்து சென்றதாக தெரிவித்தனர்.

பின்னர் காவல்துறையினர் வீட்டின் உரிமையாளரை வரவழைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பொய் புகார் கொடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து பொய் புகார் கொடுத்த அவரை காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *