“கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்” மர்ம நபர்கள் கைவரிசை…. வலைவீசித் தேடும் போலீஸ்….!!!

தொழிலாளி வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஐயப்பன் கோவில் கீழ்ப்புறம் தெருவில் வைகுண்டராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் புத்தாண்டை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வைகுண்டராஜன் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அதில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 1/2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அருகில் உள்ள சாம்பவர்வடகரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *