திருட்டு மற்றும் போதைப்பொருள் விற்றதற்காக… குண்டர் சட்டம்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி..!!

ராணிப்பேட்டையில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் போதைப் பொருள் விற்ற விவகாரத்தில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போயின. இதுதொடர்பாக சோளிங்கர் சேர்ந்த இம்ரான் கைது செய்யப்பட்டு அவனிடமிருந்து 17 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ஆற்காடு நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருட்களை விற்று வந்த கோபாலை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்று இம்ரான் மற்றும் கோபால் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *