பூக்கடைக்கு சென்ற வியாபாரி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பூ வியாபாரி வீட்டில் 23 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள டூவிபுரம் பகுதியில் சித்திரைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சித்திரவேல் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனது பூக்கடைக்கு வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்றுள்ளார். இதனையடுத்து சித்திரைவேல் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன்படி உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சித்திரைவேல் மத்திய பாகம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.