“மோசமான பீல்டிங்கும், DRS வாய்ப்புகளுமே தோல்விக்கு காரணம்” விராட் கோலி!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததற்கு மற்றும் மோசமான பீல்டிங்கும், DRS வாய்ப்புகளுமே  காரணம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 359 என்ற கடினமான இலக்கை நிர்ணயம் செய்ய  அந்த  இலக்கை  ஆஸ்திரேலிய அணி எட்டி பிடித்தது.

காரணம் நேற்றைய போட்டியில் புதிய வீரரான அஸ்டன் டர்னர் (Ashton Turner,) மார்கஸ் ஸ்டோய்னீஸ்க்கு பதிலாக களம் இறங்கினார். அவர்  இந்திய பந்து வீச்சை பதம் பார்த்து ஆட்டத்தின் போக்கை மாற்றியமைத்தார்.அவர் 56 ரன்களை பவுண்டரிகள் மூலமாக ஈட்டி 84 (43) ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எங்கள் அணியின்
பீல்டிங்கில் மெத்தனம் காட்டியதும், டி.ஆர்.எஸ். முறையில் அஸ்டன் டர்னருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆகியவை தான்  தங்கள் அணியின்  தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.