அஞ்சல் துறை மூலம் கோயில் பிரசாதம் அனுப்பும் பணி தொடக்கம்… வெளியான தகவல்..!!!!!

இந்து சமய அறநிலையத்துறை அஞ்சல் துறையுடன் இணைந்து கோவில் பிரசாதங்களை அஞ்சல் மூலமாக மக்களுக்கு அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த மே 18ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அஞ்சல் துறையுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள 48 கோவில்களின் பிரசாதங்களை அஞ்சல் மூலமாக மக்களுக்கு அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது.

அந்த வகையில் முதற்கட்டமாக சென்னை நகர மண்டலத்தின் கீழ் உள்ள 11 கோவில்கள் உட்பட தமிழகத்தில் பிற பகுதிகளில் உள்ள எட்டு முக்கிய கோவில்கள் என 19 கோவில்களின் பிரசாதம் அனுப்பும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் திருக்கோயில் கைபேசி செயலி மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவும் இந்த கோவில் பிரசாதத்தின் தேவை குறித்து பதிவு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply