நம் ஒவ்வொருவரின் விருப்பம் ???..

        விருப்பம்  :

                              விருப்பம்  என்பது  தனக்கு  பிடித்த  ஓன்றை   அல்லது  உகந்ததான  ஓன்றை  செய்யவோ  அடையவோ  வேண்டும்  என்ற  உணர்வு,ஆசை ,நாட்டம்  இவையே   விருப்பமாக  கூறுகிறோம் .  

           இருந்தும்  ஒரு  விருப்பம்  நிறைவு  அடைந்த  பின்  இன்னொரு விருப்பம்  தோன்றுகிறது. நம்  ஒவ்வொருவரின்   விருப்பம்  எண்ணற்றவை  ஆனால்  விருப்பத்தை  அடையும்  வழிகள்  பல !!!                                          

   மழையின்  மீது   விருப்பம் 

திடீர் மழையில் நனைத்தாலும்

எனக்கொன்றும் ஆகவில்லை

மழையில் நனைய

விருப்பம்  இருப்பதால்!!!!

Image result for மழையில்

                                                               உணவின்  மீது  விருப்பம்

தன்னை  விடவும்

எட்டு  மடங்கு எடையுள்ள

இனிப்பு    பொருளை

உருட்டி  செல்கிறது   எறும்பு

உணவின் மீது  உள்ள  விருப்பத்தால் !!!

 

                                                                            தேனீன் மீது  விருப்பம் 

ஆயிரம்  ஆயிரம்

பூக்களில்  அமர்ந்து

தேனெடுத்தலும்  அயர்வில்லை  !!!!

தேனீக்களுக்கு

தேனின் மீது

விருப்பம்  இருப்பதால் !!!!!

                                                                           சரணாலயத்தின்  மீது   விருப்பம் 

பல்லாயிரம்  மைல்  துரம்

பறந்து   வந்தாலும்

பறவைகளுக்குச்  சோர்வில்லை

சரணாலயத்தின்  மீது

விருப்பம்  இருப்பதால் !!!!

                                                                    மீன்களின் மீது  விருப்பம் 

 

கட்டுமரம் ஏறி

கடலுக்குள்  செல்வது

கவலையில்லை

மீன்  பிடிப்பில்

விருப்பம்  இருப்பதால் !!!!

                                  நம்  ஓவ்  ஒருவரின்  விருப்பம்  எதுவாக  உள்ளது ??..