மது அருந்தியதால்… கணவனை கண்டித்த மனைவி… தூக்குபோட்டு உயிரிழந்ததால் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப பிரச்னையால் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனியில் உள்ள இந்திரா தெருவில் சிவக்குமார்(40) மற்றும் அவரது மனைவி சுகன்யா(30) வசித்து வந்துள்ளார். சிவகுமார் தாய்லாந்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது கொரோனா என்பதால் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து சிவகுமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் இருந்தே குடித்துள்ளார்.

இதனால் சுகன்யாவிற்கும் சிவகுமாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சிவகுமார் செத்துவிடுவேன் என சுகன்யாவை மிரட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல இரவு உணவு சாப்பிட்டு விட்டு சிவகுமார் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவில் சிவக்குமார் மற்றொரு அறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து சுகன்யா எதோ சட்டம் கேட்டது என பார்த்துள்ளார். அப்போது கணவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகன்யா உடனடியாக காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிவகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *