“கணவனை கொலை செய்த மனைவி” சடலத்தை செப்டிக் டேங்கில் போட்டு மூடினார்…!!

கணவனை கொன்று வட்டு நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் வடலூர்யை சேர்ந்த அய்யாபிள்ளை மனைவி பரிமளாவுடன் தென்கூத்து என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். பரிமளாவுக்கு இவர் இரண்டாவது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அய்யாபிள்ளை திடீரென காணாமல் போனார் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் எங்காவது மது போதையில் மயங்கிக் கிடப்பாள் என்று நினைத்த உறவினர்கள் விரைவில் வீடு திரும்புவார் என்று நம்பினர். இரண்டு வாரங்கள் ஆகியும் அய்யாபிள்ளை வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரின் சகோதரர் வண்டலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .முதற்கட்ட தகவல்கள் திரட்டப்பட்ட பின் மனைவி என்ற அடிப்படையில் முதலில் அவரிடம் விசாரணையை தொடங்கினர் காவல்துறையினர். காவலர்களின் கேள்விகளை பதற்றத்தோடு எதிர்கொண்ட பரிமளா முரணான பதில்களை தெரிவித்ததால் காவல்துறையின் சந்தேகப்பார்வை அவரை நோக்கி திரும்பியது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட பரிமளாவிடம் இருந்து அதிர்ச்சிக்குரியது உண்மைகள் வெளிவந்தன.
மது க்கான பட முடிவு
மதுப்பழக்கத்திற்கு அடிமையான அய்யாபிள்ளை அடிக்கடி குடித்துவிட்டு பரிமளாவுடன் சண்டையிடுவார் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று மதுபோதையில் இருந்த அய்யாப்பிள்ளை வழக்கம்போல் பிரச்சினை செய்துள்ளார். ஆத்திரமடைந்த பரிமளா திடீர் தாக்குதல் நடத்தியதில் நிலைகுலைந்து அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அய்யாப்பிள்ளை மது குடித்து இருந்ததால் போதை தெளிந்ததும் எழுந்து விடுவார் என நினைத்த பரிமளா தனது வேலைகளை கவனிக்கத் தொடங்கி உள்ளார். ஆனால் நள்ளிரவு வரை அவர் எழவே இல்லை பதறிப்போன பரிமளாவும் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தபோது பேச்சு மூச்சில்லாமல் கிடந்தார் அய்யாபிள்ளை. செய்வதறியாமல் திகைத்த பரிமளாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
கொலை க்கான பட முடிவு
ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியை திறந்த பரிமளா அதில் ஐயாபிள்ளையின் சடலத்தை போட்டு மூடி விட்டதாக காவல்துறை கூறுகிறது. யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக கழிவுநீர் தொட்டியை திறக்கும் பகுதியை சிமெண்ட் பூசி மறைத்து விட்டார் பரிமளா. அக்கம்பக்கத்தினரிடம் ஒன்றும் தெரியாதது போல் நடந்து கொண்டதாக கூறுகின்றனர். இதையடுத்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் கழிவுநீர் தொட்டி உடைத்து ஐயா பிள்ளையின் சடலத்தை எலும்புக்கூடாக மீட்டனர். கணவனை கொலை செய்து விட்டு காணாமல் போனதாக நாடகமாடிய பரிமளா கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .