மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை…!!

பொள்ளாச்சியில் மதுபோதைக்கு அடிமையானதை மனைவி தட்டி கேட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான  அருண் என்ற கங்காதரன்  வயது 23 இவரது மனைவி ஜோதி சரண்யா வயது 20  இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடமாகிய நிலையில் கங்காதரன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related image

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கணவன் – மனைவிக்கும் தகராறு முற்றியதால் மிகுந்த மனவேதனை அடைந்த கங்காதரன் வீட்டில் யாரும் இல்லாத போது  வீட்டில் உள்ள தனி அறையில் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவம் குறித்து விரைந்து வந்த கோவை மாவட்ட பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.