அடுத்த இரு தினங்களுக்கு வெப்பம் வாட்டி வதைக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் வருகின்ற இரண்டு நாட்களுக்கு இயல்பு நிலையை விட கூடுதலான வெப்பம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பைவிட அதிகமாக வெப்பநிலை இருக்கும் என்றும் , வெட்பத்தின் அளவு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கூடுதலான வெப்பம் க்கான பட முடிவு

மேலும் வானிலை ஆய்வு ,மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழகத்தில் அதிகபட்சமாக   சேலம் மற்றும் திருத்தணியில் நேற்று 105 டிகிரி வெப்பம் பதிவானதாகவும் ,  வேலூர் , திருவண்ணாமலை திருச்சி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்கும் என்றும் அதிகபட்சமாக சுமார் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.