வேலூர் நாடாளுமன்ற தேர்தல்….வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்..!!

வேலூரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி  நடைபெற இருக்கும் தேர்தலுக்கான வேட்மனு தாக்கல் இன்று முதல் நடைபெற இருக்கிறது.

வேலூரில் ஏப்ரல் 18ஆம்  தேதி நடைபெற  இருந்த தேர்தலானது  ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம்  தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் இன்று முதல்  18ஆம்  தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for தேர்தல் ஆணையம்

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள  புதிய நீதிக் கட்சித் தலைவர் A.C.சண்முகம் இன்றும், திமுக சார்பில் போட்டியிட உள்ள  கதிர் ஆனந்த் நாளையும் தங்களது  வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.இதையடுத்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான  சண்முகசுந்தரத்திடம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் நடைபெறுவதால் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *