கொரோனவை கட்டுப்படுத்த… இந்த மருந்தை பயன்படுத்துங்கள்… அனுமதி வழங்கிய டிரம்ப்!

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இதுவரையில் 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா வைரசால் 150க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Image result for The US has given to use the malaria vaccine as a vaccine for the coronavirus.

இதனிடையே அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த கொடிய கொரோனாவை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மலேரியா நோய் தடுப்பிற்கான மருந்தை, கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தாக, பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.