”உண்மை ஒருநாள் வெல்லும்” ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை…!!

ப.சிதம்பரம் குறித்து பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவரின் குடும்பத்தினர் அறிக்கை விடுத்துள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. அதே போல அமலாக்கத்துறையினர் வழக்கு நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் ப.சிதம்பரம் வழக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அவரின் குடும்பத்தை மிகுந்த சோகத்தில் தள்ளியுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் , சட்டவிரோதமாக பணம் ஈட்ட வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை.அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.

Image result for p chidambaram family

மேலும் அந்த அறிக்கையில் , தேவையான சொத்துகள் இருப்பதால் தவறான பணம் சேர்க்க அவசியம் இல்லை பல நாடுகளில் சொத்துகள்,வங்கிக் கணக்குகள் இருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. ப.சிதம்பரத்தின் 50 ஆண்டுகால பொதுவாழ்வில் கிடைத்த நற்பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது.ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயன்றாலும் உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.நிறைவான சொத்துகளை கொண்டு, முறையாக வருமானவரி செலுத்தும் சிறிய குடும்பம் நாங்கள் , அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள், கணக்கில் காட்டாத சொத்துகள், போலி நிறுவனங்கள் பற்றிய ஆதாரத்தை அரசால் காண்பிக்க முடியுமா? என்று ப.சிதம்பரத்தின் குடும்பத்தார் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.